“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

கனடாவில் சிறப்பாக இயங்கிவரும் “கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி எம் அனைவரதும் மனங்கவரும் டை நிகழ்வாக அமைந்தது.
“கலைக்கோவில் நுண்கலைக் கூடத்தின் நிறுவனர்களும் ஆசிரியர்களுமான திரு க. குகேந்திரன், மற்றும் திரு வனிதா குகேந்திரன் ஆகியோரின் புதல்வரும் மாணவரும் ஏழே ஏழு வயது நிரம்பிய மழலைக் கலைஞருமாகிய செல்வன் ஆரன்; குகேந்திரன் அவர்களது “பால லயம்-1” என்னும் இசை டிவிடி வெளியீட்டு விழாவும் அவரது மிருதங்க ஆற்றலை காட்டும் கச்சேரியும் சிறப்பாக நடைபெற்றது.
யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு கௌரிசங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் . சிறப்பு விருந்தினராக யாழ்பபாணம் பல்கலைக் கழகத்திலிருந்து இங்கு வந்திருக்கும் திரு பத்மலிங்கம் அவர்களும் கலந்து கொணடார்.
அறிவிப்பாளராக திருமதி கோதை அமுதன் பணியாற்றினார். பல புகழ்பெறற இசை மற்றும் நடன ஆசிரிய ஆசிரியைகள் அங்கு வருகை தந்திருந்தனர்.
மொத்தத்தில் நேற்றைய நிகழ்வு எமது இளைய தலைமுறையின் கர்நாடக இசைத் துறை வெற்றிகளை யும் சாதனைகளையும் பறைசாற்றும் ஒரு மேடை நிகழ்வாக அனைவராலும் பாராடடப் பெற்றது.
செல்வன் ஆரன்; குகேந்திரன் என்னும் மழலைக் கலைஞனை வாழ்த்துக்கள் கூறும் கனடா உதயன் , அவரது எதிர்கால சாதனைகளுக்காகவும் பிரார்த்தனை செய்கின்றது.