கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தெளசன்ட் ஒக்ஸ் என்ற பகுதியில் உள்ள நடன விடுதியில் ஆட்டம், பாட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒருவர் துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு தள்ளினார். இதில் பாதுகாப்பிற்கு இருந்த ஒரு போலீஸ்காரர் உள்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

காயமுற்ற 10க்கும் மேற்பட்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர் நடன விடுதியில் இறந்து கிடந்தார். அவர் யார் என்ன காரணத்திற்காக சுட்டார் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment