Go to ...
Canada Uthayan Tamil Weekly
* தேர்தல் வெற்றிக்காக காங்., எந்த எல்லைக்கும் செல்லும்: தேவகவுடா    * சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்    * 'தவறு நடந்தது உண்மை தான்': மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்    * இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்    * கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லமிட்டெட் என்ற சென்னை நகைக் கடை அதிபர் சுமார் 824 கோடி ரூபாய் கடன்: சி.பி.ஐ. சோதனை
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, March 23, 2018

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்


கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார் ,1979 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை கள் அரசியற்ற தீர்வாகாது என் வலியுறுத்தி தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக தனது தலைவர் குமார் பொன்னம்பலத்தோடு காத்திரமான பேச்சாளராக அரசியற் களமிறங்கியவர் .
பல்வேறு சர்வகடசி மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் . இறுதியாக இடம்பெற்ற அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் (APRC) ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளராக ஜனநாயக மக்கள் முன்னணி யின் சார்பாக தொடர்ச்சியான பங்களிப்பை அறிக்கை ஆவணமாக பூரணமாகும் வரை செயற்றப்பட்டவர் .

கொழும்பு மாநகரசபை உறுப்பினராக வெற்றி பெற்று பணியாற்றியவர் பின்னர் கடந்தமேல் மாகாண சபை மாகாண சபையின் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் பாரிய வெற்றிபெற்று கொழும்பு மாவட்ட மேல் மாகாண சபை உறுப்பினரானார். மேல் மாகாண பாட சாலைகளின் வளர்ச்சியில் மிக அக்கறை கொண்டவர் பெரும் முயறசியோடு துணிந்து கிருலப்பனையில் ” குமர உதயம் தமிழ் வித்தியாலயம்” எனும் அரச பாடசாலையை உருவாக்கினார் .

குறைந்தவருமானம் பெறும் தோட்டப்புற மக்களின் சுய தொழில் முயற்றசிக்காக பெரும் உதவி புரிந்தவர் எங்கள் டாக்டர் நல்லையா குமரகுருபரன் என்றால் மிகையாகாது .இன்று கொழும்பு வாழ் தமிழ் நெஞ்சங்களில் அன்புக்குரியவராக நிலைபெறுகின்றார் . இன்று ஜனநாயக மக்கள் கொங்கிரஸின் முன்னாள் தலைவராகவும் இன்று கௌரவ பிரபா கணேசனும் இணைந்து கொண்டு ஜனநாயக மக்கள் கொங்கிரஸின் பொது செயலாளராகவும், அமரர் டாக்டர் வேலாயுதபிள்ளை ,அதிபர் அருணாசலம், குமார் பொன்னம்பலம்,வீ .திருநாவுக்கரசு,தில்லைக்கூத்தன் நடராஜா போன்றவர் கள் நடாத்திய கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழுவை இன்று தன் நீண்ட கால அரசியல் நண்பர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தியை தலைவராக்கி தமிழ் தேசிய பணிக்குழுவின் முதுகெலும்பாக செயலாளராகவும் விளங்குகின்றார் .

தொடர்ந்து குமார் பொன்னம்பலம் வழியில் தொடர்ந்து கொழும்பு வாழ் தமிழ் மக்களின் மத்தியில் கற்ற ஒரு அரசியல் தலைமையை பேணிவருபவர் எங்கள் குமரகுருபரன் தமிழ் மக்களின் மத்தியில் கற்ற ஒரு அரசியல் தலைமையை பேணிவருபவர் எங்கள் குமரகுருபரன் .இன்று கொழும்பில் ஒரே மாற்று தலைமை தர வல்லவர்கள் ஒருமைப்பாட்டை மனித நேயத்தை கொண்டவர்கள் பிரபா கணேசனும் குமரகுருபரனுமே . அரசியல் புத்திஜீவியாக தொடர்ச்சியான அரசியற் செயற்றப்பட்டாளர் டாக்டர் நல்லையா குமரகுருபரன் இன்னும் பல்லாண்டு காலம் நல்ல சுகத்தோடு வளத்தோடு வாழ்ந்து அரசியல் புத்திஜீவியாக வழிகாட்ட வேண்டும், தமிழர் பிரதிநிதியாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் .
– எஸ் .எஸ் .தங்கராஜா. பி ஏ ,SLPS
முன்னாள் கல்வி பணிப்பாளர் .
உப தலைவர் தமிழ் தேசிய பணிக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2