கற்பழித்தால் ஆண்மை நீக்கப்படும் – அவசர சட்டத்திற்கு பாக்., அதிபர் ஒப்புதல்

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனையடுத்து கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

latest tamil news

 

இந்நிலையில், இந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இச்சட்டத்தின்படி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ செய்யும் மருந்து கொடுக்கப்படும். இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும். பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கவும், நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்கவும் அவசர சட்டம் வகை செய்கிறது.

latest tamil news

மேலும், பாகிஸ்தான் பாலியல் சட்டத்தின்படி பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவது, ஆசைக்கு இணங்காதபோது வற்புறுத்தி பாலியல் செய்வது, உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்து பாலியலில் ஈடுபடுவது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவை சட்டவிரோதமாக கருதப்படும். மேலும், குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.