- கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து - 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்
கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 10 நாட்களில் பிரதமர் மோடி 15 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா 30 இடங்களிலும் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 20 இடங்கள் என 10 நாட்களில் 65 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல், மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவீரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தல், பாரதிய ஜனதா மற்றும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது.
தென்னிந்தியாவில், கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ., கட்சிக்கு போதி்ய பெரும்பான்மை உள்ளது. அதனை முதலீடாக கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று தென்பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் கால்பதிக்க பாரதிய ஜனதா கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.