கர்நாடகா அரசுக்கு ஆபத்து !!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. – காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்களும் மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

எதிர்க்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க் கள் உள்ளனர்.ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சியினருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இரு கட்சி

தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் சிலரும் கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

‘சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித் தன.இதனால் அமைச்சர் பதவியை எதிர் பார்த்து காத்திருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப் படையாக கருத்து தெரிவிக்க துவங்கி உள்ளனர்.

காங். மூத்த தலைவரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ரோஷன் பெய்க் கர்நாடக மாநில காங். தலைவர்களை கடுமையாக விமர்சித்துள் ளார். முன்னாள் முதல்வரான சித்தராமையாவை ‘திமிர் பிடித்தவர்’ என்றும் கட்சி பொதுச் செயலர் வேணுகோபாலை’பபூன்’என்றும் கூறியுள்ளார்.

காங். தலைவர்கள் முஸ்லிம்களை வெறும் ஓட்டு வங்கியாக கருதுவதாகவும் முஸ்லிம்கள் தேவைப்பட்டால் பா.ஜ.வுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இவருக்கு காங்கிரசைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க் கள் ஆதரவு உள்ளதாகவ தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் லோக்சபா தேர்தலில் காங். – ம.ஜ.த. கூட்டணி தோல்வி அடைந்தால் இவர் கள் 20 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து குமாரசாமி அரசைகவிழ்க்க திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே காங். தலைவர்களை விமர் சித் தது குறித்து விளக்கம் கேட்டு ரோஷன் பெய்க் கிற்கு கட்சி மேலிடம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.