கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் : பிரதமர் மோடி

டோராடூன்,
டேராடூனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ரிப்பன்கள் மற்றும் தெருவிளக்குகளை திறந்து வைப்பதற்காக தான் தேர்வுசெய்யப்படவில்லை என்று ஆவேசமாக பேசினார்.விரைவில் பொதுதேர்தல் நடைபெறவுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் நகரில் சர்தம் நெடுஞ்சாலை திட்டத்தை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* உத்தரகாண்ட் இறைவனின் நிலம் ஆகும். துணிச்சலான இடம் உத்தரகாண்ட்.
* பெருமளவில் மக்கள் இங்கு கூடியிருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
*சர்தாம் நெடுஞ்சாலையை திறந்து வைப்பது உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும்.
*உத்தரகாண்ட் மக்கள் வளர்ச்சிக்காக இனி காத்திருக்க வேண்டியது இல்லை.
*முந்தைய அரசு யாத்திரை வருபவர்களுக்கு எந்த வசதியையும் ஏற்படுத்தவில்லை.
* சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதை அரசு இலக்காக வைத்துள்ளது.
*அடுத்த முறை யாத்திரை வரும் பக்தர்கள் இந்த திட்டத்திற்காக அரசை எண்ணி பார்ப்பீர்கள்
* மாநிலம் வளர்ச்சியின் புது உயரத்திற்கு எடுத்து செல்லப்படும்.
*நான் தவறான வாக்குறுதிகள் எதையும் அளிக்கவில்லை. நான் சொன்னது எதையும் மறக்கவில்லை.
*18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம், காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
*கடந்த 40 ஆண்டுகளாக ஒரேபதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை  முன்னாள் ராணுவ வீரர்கள் கோரி வந்தனர். ஆனால் முந்தைய அரசு எதையுமே செய்யவில்லை.
*முதல் நாளில் இருந்தே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரேபதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் உண்மையாகும் என்று கூறி வருகிறோம்.
*கருப்பு பணம் நாட்டை சீரழித்து வருகிறது, கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
* ஊழல் வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாங்கள் கூறியிருந்தோம். தற்போது அது நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.