கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென இன்று ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவிரி என்ற தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு உடன் சென்றுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திமுக தலைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.