கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இல்ல திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.

இதற்கிடையில் , சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி விரும்பினார். இதனையடுத்து அவர் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார்.

அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , கனிமொழி, முன்னாள் அமைச்சர் துரை முருகன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் மோடி திமுக தலைவரை சந்தித்ததில் அரசியல் ஏதுமில்லை என்று பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.