கமல் கட்சிக்கு பை பை !! காலியாகும் கூடாரம் !! ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் – தமாஷ் !!

நடிகர் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அதன் துணை தலைவர் மகேந்திரன் விலகினார். இவரைத்தொடர்ந்து பொன்ராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய கமல், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாக சட்டசபை பொதுத்தேர்தலை சந்தித்தார். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல் தோற்றார்.

இந்நிலையில் கட்சி துணை தலைவர் மகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை,
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுத்துள்ளேன்.

கட்சியின் பெரிய தோல்விக்கு பிறகும் தனது தோல்விக்கு பின்னரும் தலைவர் கமல் தனது அணுகுமுறையில் மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தெளிவான சிந்தனையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும், அனைத்து நல்ல தலைமை பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொன்ராஜ், சந்தோஷ்பாபு சி.கே. குமாரவேல், உமாதேவி, உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் விலகினர். இதனால் கமல் கட்சி கூடாராம் காலியானது.

நிர்வாகிகள் விலகியதையடுத்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடந்தது இதையடுத்து கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூத்த நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்கள் மீது கமல் விரைவில் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.