கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செண்டலங்கார ஜீயர் கூறியதாவது: கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.

ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம். கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது. அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.