கன்னியாஸ்திரி தெரிவித்துள்ள பலாத்கார புகாருக்கு பிஷப்பிராங்கோ முகல்கல் பதில்

கேரளாவில் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ள பலாத்கார புகாருக்கு பிஷப்பிராங்கோ முகல்கல் பதில் அளித்துள்ளார். பலாத்கார குற்றம் நடந்தததா என்பது 3 பேருக்கு மட்டுமே தெரியும் என்றார். முதல் நபர் புகார்தாரர், 2 வது நான், 3வது கடவுள் என்றார்.
இது வரை வாய் திறக்காமல் இருந்த பிஷப் ஜலந்தரில் இருக்கிறார். அவர் தற்போது ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் மீது களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். கன்னியாஸ்திரி என்னை மிரட்டி பார்க்கிறார். இது பெரிய சதி. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை தரட்டும். உண்மைகள் வெளி வரும் என நம்புகிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்னை நிர்பந்தப்படுத்த முயற்சி நடக்கிறது. குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. கன்னியாஸ்திரி என்னிடம் பல தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். எம்.எல்.ஏ., ஜார்ஜ் பற்றி எனக்கு தெரியாது.
எனது மதிப்பை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இது எனக்கு பெரிதும் மன வலியை தந்துள்ளது. குற்றம் நடந்ததா என்பது 3 பேருக்கு மட்டுமே உண்மை தெரியும். புகார் தெரிவிப்பவர், நான், 3வது கடவுள். பலத்கார குற்றத்தை மிஷனரி ஆப் ஜீசஸ் மறுத்து வருகிறது. இவ்வாறு பிஷப் கூறினார்.