- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!
கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவிலுள்ள கோட்டயத்தில், ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, 21, கடந்த, 1992ல், பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை என, முடிவுக்கு வந்தனர். பின், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி, வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர், ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார். இதனால், அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து, தாமசும், செபியும், உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.