- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

கன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார்
பிஷப் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியை, ஆசை வார்த்தை காட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்ற பாதிரியாரை, ராஜினாமா செய்யும்படி சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது , கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறினார்.
அப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை 13 முறை அந்த கொடூர செயல் நடந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார். இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தபட்ட பிஷப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியுடன் சமீபத்தில் பாதிரியார் ஜேம்ஸ் என்பவர் போனில் பேசியுள்ளார். பிஷப் குடும்பத்தினர் நிலம் வாங்கி கொடுக்கவும், பணமும் தர தயாராக உள்ளனர். அதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற வேண்டும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதை கன்னியாஸ்திரி ஏற்க மறுத்து விட்டார். மேலும், பாதிரியார் மீது போலீசிலும் புகார் அளித்தார். இந்த நிலையில், கன்னியாஸ்திரியுடன் பாதிரியார் போனில் பேசிய பேச்சின் விவரம் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, பாதிரியாரை ராஜினாமா செய்யும்படி அவர் சார்ந்த மேரி இமாகுலேட் என்ற அமைப்பின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.