- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ
கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கல், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில், அவரிடம் விசாரணை நடத்திய போது, 15 விஷயங்களில் முரண்பாடு காணப்பட்டது என கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் முல்லக்கல் பதவியை தற்காலிகமாக ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார். இத்துடன் முன்ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை செப்., 25ம் தேதி நடக்க உள்ளது.
இந்த வழக்கில் இதுவரை இரண்டு பிரமாண பத்திரங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் பிரமாண பத்திரம் ஆக., 13ல் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரி வந்து இருந்தார். அதையே பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டு இருந்தார்.
கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு விடுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஷப் முல்லக்கல்லிடம் விசாரணை நடத்திய போது, 15 முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. 2014ம் ஆண்டு மே, 5ம் தேதி தான் முதல் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது. அன்றைய தினம் குருவிலாங்காடு விடுதிக்கு தான் செல்லவில்லை. இடுக்கி மாவட்டத்தில் தங்கி இருந்தாக பிஷப் கூறினார். ஆனால், இடுக்கியை சேர்ந்த தலைமை கன்னியாஸ்திரி மற்றும் பிஷப்பின் டிரைவர் மாற்று தகவல்களை தெரிவித்தனர்.
குருவிலாங்காடு விடுதியின் விருந்தினர் பதிவேட்டில் பிஷப் வந்து இருந்தது குறிப்பிடப்பட்டு இரு்நதது. அதே போல், இரண்டு கன்னியாஸ்திரிகள் பிஷப் விடுதிக்கு வந்ததை உறுதி செய்தனர். தன்னை 14 முறை பிஷப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கூறியுள்ளார். ஆனால், பிஷப் தான் ஒன்பது முறை தான் குருவிலாங்காடு விடுதிக்கு சென்றதாக கூறியுள்ளார். விடுதியின் விருந்தினர் பதிவேட்டில் அவர் 14 முறை வந்ததாக குறிபிடப்படப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 15 முரண்பாடுகள் உள்ளன.
பிஷப் முல்லக்கல், சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இதற்கு முன், 2005ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் பாதிரியார் மார்க் பர்னெஸ் மர்ம சாவு வழக்கிலும், பிஷப் முல்லக்கல் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார்.