கனடிய தமிழ்ப் பத்திரிகையாளர் ஆர்.என்.லோகேந்திரலிங்கத்தின் தமிழ்ப்பணிக்குப் பாராட்டு

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பணியாற்றும் ஈழத் தமிழர்களில் மிக முக்கியமானவர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள். அண்மையில் இவரது தமிழக வருகையை முன்னிட்டு தமிழ்ப்பபணிக்கான பாராட்டு விழாவும். தமிழக எழுத்தாளர்களுடன் கலந்துரை யாடலும் நடைபெற்றது .28/07/2018 அன்று சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மேன்மை சஞ்சிகை ஆசிரியர் மூ.மணி தலைமையேற்க நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்

கவிஞர் பா . தென்றல் , கவிஞர் தாமரைப் பூவண்ணன் , மருத்துவ கலாநிதி வே.த.யோகநாதன் எழுத்தாளர் வித்யா , வ.மு.சே .திருவள்ளுவர் , ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ஆர்.என் .லோகேந்திரலிங்கம் ஏற்புரையாற்றினார் இவர் பேசும் போது இது போன்ற இலக்கிய சந்திப்பு எனக்கு உட்சாகத்தை தாக்கிறது . கனடாவில் எங்களது பணிகளுக்காக நாங்கள் ஓடிக்கொண்டே இருக்க்க வேண்டும் அதனால் கொஞ்சம் களைப்பும் வரும் உங்களை சந்திப்பதன் மூலமாகவும் கலந்துரையாடுவதன் மூலமாகவும் அந்தக் களைப்பு காணாமல் போய்விடுகிறது .குறிப்பாக இலக்கியவாதிகளோடு கலைந்துரையாடுவது புதிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது தேங்கி விடாமல் தொடர்ந்து பயணிக்க இது உந்து சக்தியைத் தருகிறது இப்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த நந்தவனம் சந்திரசேகரனுக்கும் கலந்து கொண்ட உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்

முன்னதாக கவிஞர் மணி எழிலன் அனைவரையும் வரவேற்க ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார் .திருச்சி விம்ரா பேக்ஸ் நிறுவனர் சாதிக் பாட்சா நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார் மேலும் கவிஞர் நாகராசன் கவிஞர் திலகவதி .பத்திரிகையாளர் மோ பாட்டழகன் . செளந்ததர்ராஜன் . பிரகாஷ் , தொழிலதிபர் சிவக்குமார், கவிஞர் பாரதி பத்மாவதி ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்