கனடிய தங்க நகை வர்த்தகர் கௌரிகுமாருக்கு இலங்கையில் கிட்டிய இரத்தினக் கல் அதிஸ்டம்

ஆறு கிலோ எடை கொண்ட இரத்தினக் கல்லுக்கு அதிபதியானார்.

பல கோடி ரூபாய்களைப் பெற்றுக் கொடுத்த புஸ்பராக வகைக் கல்லை கொள்வனவு செய்வதற்கு உலக நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் இலங்கை நோக்கி பறக்கின்றன.

கனடாவின் ஸ்காபுறோ நகரில் ஜெயசாயி நகை மாளிகை என்னும் தங்க நகை மாளிகையை மிக நீண்ட காலமாக நடத்தி தங்கள நகை வர்த்தகத்திலும் இரத்தினக் கல் வியாபாரத்திலும் புகழ்பெற்று விளங்கும் “ஜெயசாயி” கௌரி குமாருக்கு இலங்கையில் கிட்டிய மேற்படி அதிஸ்டம் உலகெங்கும் பேசப்படும் ஒரு மதிப்பு மிக்க விடயமாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வர்த்தக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக அடிக்கடி இலங்கைக்கு செல்லும் இவர் தனக்கு ஏற்கெனவே உள்ள இரத்தினக் கல் மீதான ஆர்வத்தினால் அங்கு இரத்தினபுரியிலும் மஹியங்கனை என்னும் பகுதியிலும் அரச காணிகளை குத்தகைக்கு எடுத்து அங்கு இரத்தினக் கல் அகழும் பணியை மேற்கொண்டார்.
பல நாள் முயற்சியில் சிறிய சிறிய கற்கள் இவர் கைக்கு கிட்டினாலும் கடந்த மாதம் கிட்டிய இரத்தினக் கல் அதிஸ்டம் இவருக்கு பல கோடி ரூபாய்களை அள்ளி வழங்கியுள்ளது.

பல கோடி ரூபாய்களைப் பெற்றுக் கொடுத்த புஸ்பராக வகைக் கல்லை கொள்வனவு செய்வதற்கு உலக நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் இலங்கை நோக்கி பறக்கின்றன.

கனடா உதயன் நிறுவனம் திரு கௌரி குமாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
இவரது ஆதரவு கடந்த 22 வருடங்களாக கனடா உதயன் நிறுவனம் நடத்தும் கலை நிகழ்சசிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கே உள்ள படங்கள் மற்றும் அதிகாரபூர்வமான வீரகேசரி பத்திரிகைச் செய்தி மற்றும் கொழும்பில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தின் சான்றிதழ் ஆகியன இங்கு காணப்படுகின்றன.