கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

மொன்றியால் வாழ் எழுத்தாளரும், 25வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா அவர்களுக்கு அண்மையில் ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 ஆண்டு நிறைவு விழாவின் போது முன்னாள் தலைவர்கள் சிலர் கௌரவிக்கபபட்டார்கள்;.அந்தவகையில் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஸ்தாபகத் தலைவருமான வீணைமைந்தன் சண்முகராஜாவிற்கான கேடயத்தை முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு சின்னையா சிவனேசன் வழங்கினார். அப்பொழுது அவர்களோடு எழுத்தாளர் இராஜவர்மன், மொன்றியார் வர்த்தகப் பிரமுகர் ஏஎம் ஆர் நிறுவனர் இராஜகோபார் முத்தையா அவர்கள், கின்னஸ் உலக சாதனையில் தமிழர்களின் அடையாளத்தை நிரூபித்த சாதனைத் தமிழன் சுரேஸ் ஜோககிம் வர்த்தகப் பிரமுகர்கள் ராஜ் பேரம்பலம் ஈரோ எலக்ரிகல்ஸ் அதிபர் மணியம் ஆகியோர் நிற்பதைக் காணலாம்.