கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அழகிய முறையிலும் சமய சாஸ்த்திர முறைக் கேற்பவும், மிகுந்த பொருட்செலவிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டஙகள், அமைக்கப்பட்டு வரும் ஆலயத்தில் அமையவிருககும்; சிறப்பம்சங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை எதிர்நோக்கும் நிதி மற்றும் தொழில்நுட்பம் மறறும் சட்ட ரீதியான சவால்கள் ஆகியவற்றை தமிழ் பேசும் ஊடகங்களில் பிரதிநிதிகளுக்கு விளக்கும் கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை புதிய ஆலயம் கட்டப்படும் ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் உள்ள ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

ஆலய அறங்காவல் சபையின் உறுப்பினர் மற்றும் தலைவர் திரு சுப்பிரமணியம் முத்து ராசலிங்கம் மற்றும் திரு தனபாலசிங்கம் ஆகியோர் இந்த கலந்துரையாடலுககான ஏற்பாடுகளைச் செயதிருந்தார்கள்.

இந்த ஆலயத்தின் கட்டட வேலைகள் மிகுந்த பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டட அமைப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த அனுபவமும் ஆற்றலும் கொண்ட திரு விஜயபாரதி சுப்பிரமணியம் இந்த பொறுப்பை ஏற்று சிறப்பாக தன் பணியைச் செய்து வருகின்றார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

பல ஊடகப் பிரதிநிதிகள் அங்கு சமூகமளித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும், ஆலய நிர்வாக சபையினர் முதலில் ஆலய வளாகத்தைச் சுற்றிக் ◌காண்பித்தார்கள். தொடர்ந்து நிலக் கீழ் பகுதியில் அமைய வுள்ள அழகிய திருமண மண்டபம் மறறும் மேல்த் தளத்தில் 150 அடி தர 90 அடி பரப்பளவில் அமையவுள்ள பிரதான முருகன் ஆலயம் ஆகியவற்றின் சிறப்புக்கள் மற்றும் தற்போதைக்கு கட்டடத்தின் எந்தளவு வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன, நிர்மாணப்பணிகளில் உள்ள விசேட அம்சங்கள் ஆகியவற்றை விபரித்துக் கூறி ஊடகங்களின் பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.
ஆலயத்தில் இராஜகோபுரம் உட்பட நான்கு கோபுரங்கள் ஆலயத்தின்; வெளித்தோற்றத்திற்கு அழைகையும் ஆன்மிக பலத்தையும் அளிக்கும் என்றும் அறங்காவல் சபையினர் தெரிவித்தனர்

இந்த ஆலயத்தின் உட்பகுதியில் முதியோர்களின் வசதி கருதி மின் தூக்கி (லிப்ட்) வசதிகளும் உள்ளன என்;பதும் ஓய்வு எடுக்கும் அறைகள் போன்றவை சிறப்பான முறையில் அமைக்கபபடும் எனவும் அறியப்படுகின்றது
இந்த ஆலய நிர்மாணப் பணிகள் நிறைவுற்றால் கனடாவில் மிகவும் பிரமாண்டமானதும் அழகிய தோற்றம் கொண்டதும் மேலும் ஏனைய சமூகங்களால் விதந்துரைக்கப்படும் ஆலயமாகவும் திகழும் என்று எதிர்பார்க்கலாம்.