கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதலும், வீடுகள் போன்ற ஆதனங்களை பொறுப்பாக வைத்து பணம் பெறுவதும்… அவற்றினால் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும்…………..

மேற்கூறிய விடயம் என்பது கனடாவிற்கு புதியதல்ல. இங்கு வீடுகள் போன்ற ஆதனங்களை வாங்கும் போது எம்மிடம் உள்ள பணத்திற்கு மேலதிகமாக மோட்கேஜ் கடன் பெறுதல், பின்னர் அந்த பணத்தை தவணை மூலம் வட்டியுடன் சேர்த்து, பணம் பெற்ற வங்கிக்கோ அன்றி நிதி நிறுவனத்திற்கோ திருப்பிச் செலுத்துவது என்பது எத்தனையோ ஆண்டுகளாக இங்கு வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் இடம்பெறும் ஒரு விடயமாகும்.

ஆனால் அண்மையில் எமது தமிழர் சமூகத்தில் இடம்பெற்ற சில மோட்கேஜ் கடன் பெற்று அதனை மீளக்கட்ட முடியாமல தங்கள் ஆதனங்களை இழந்த சம்பவங்கள் தொடர்பாக உரையாடல்கள் மூலமும் முகநூல்கள் மூலமும் பகிரப்பட்ட பல விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் ஆகியவை எமது அலுவலக மேசை வரையும் வந்துவிட்ட காரணத்தால், இவை ◌தொடர்பாக விசாரித்து எம்மால் முடிந்த அளவிற்கு எமது மக்களுக்;கு தெரியப்படுத்தலாம் என்று எண்ணி அந்தப் பணிகளில் இறங்கினோம்.

பல இடங்களில் பல பிரச்சனைகள், விரக்தி, கவலை ஏமாற்றம் இப்படியான பாதிப்புக்களைத் தரும் விளைவுகளினால் குழப்பங்கள். இவ்வாறான விடயங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பறம் இருக்க, வெளியில் சம்பந்தமே இல்லாதவர்கள்ஆங்கே எழுதிய விடயங்கள் பதிவுகள் ஆகிய பலரது நேரத்தை திருடியிருந்ததை அவதானித்தோம்

இவ்வாறு நாம் விசாரித்து எமது பணியை மேற்கொண்ட போது, பல கடன்பெற்ற விடயங்கள் எமக்கு கிடைத்தன. அவற்றில் சிலர் பெற்ற கடனை திரும்பக் கட்ட முடியாமல் தங்கள் ஆதனங்களை இழந்த கவலை தரும் செய்திகள்
எமக்கு கிடைத்தன.

அவ்வாறான சில சம்பவங்களில் ஒன்றை மட்டும் தற்போதுஎமது முகநூல் வாசகர்களோடும் பத்திரிகை வாசகர்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

இவ்வாறு தங்கள் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற கடனை திரும்பவும் செலுத்தாத காரணத்தால் தங்கள் வீட்டை இழந்த தம்பதியினர், தற்போது பிரம்டன் நகரில் வாழ்ந்து வரும் பெற்றிக் பாஸ்கரன், ஞானமலர் சண்முகம் ஆகியோரே.

இவர்கள் தங்கள் வீட்டை அடைமானமாக வைத்து அவசரத்திற்கு பணம் தேவை என்று ஒரு நிதி நிறுவனத்திற்குச் சென்று ஒரு இலட்சம் டாலர்கள் பணத்தைப் பெற்று பின்னர் தாங்கள் சம்மதித்த வண்ணம் மாதந்த கட்டணத்தை வட்டியோடு நான்கு மாதங்களுக்கு மட்டுமே கட்டி விட்டு தொட;ர்ந்து கட்ட முடியாமல் பல தடவைகள் கடன் வழங்கிய நிதி நிறுவனத்திடமும் அதன் சட்டத்தரணியிடமும் கால அவசாகம் கேட்டு, அப்படியிருந்தும் இயலாமல் இறுதியில் நிதி வழங்கிய நிறுவனம் நீதி மன்றத்தின் மூலம் சட்ட நடடிவடிக்கை எடுக்க ஆரம்பித்தபோதுதான் பணம் பெற்ற அந்த தம்பதி திகைத்துப் போய்;நின்றது.

தற்போது பிரம்டன் நகரில் வாழ்ந்து வரும் பெற்றிக் பாஸ்கரன், ஞானமலர் சண்முகம் ஆகியோரே இந்த தம்பதியர் இருவரும் தங்கள் வீட்டை அடமானமட் வைத்து ஒரு இலட்சம் டாலர்கள் பணம் பெறுவதற்கா பல இடங்களுக்கும் சென்று பணம் கிடைக்காத பட்சத்தில் ஸ்காபுறோவில் பல பங்களார்கள் கொண்ட ஒரு நிதி நிறுவனமான THE BOND GROUP என்ற கம்பனியை நாடினார்கள். அவர்கள் பணம் கொடுப்பதற்கு சம்மதித்து அவர்களின் தகுதிக்கும் ஆதனத்தின் பெறுமதிக்கும் ஏற்ப ஒரு இலட்சம் டாலர்கள் வழங்க சம்மதித்தார்கள்.
மேற்படி THE BOND GROUPநிதி நிறுவனத்தில் தான் தமிழ் பேசும் ஒரு நிதி ஆலோசகராக திரு ரொம் திருக்குமார் பணியாற்றுகின்றார்.

பெற்றிக் பாஸ்கரன், ஞானமலர் சண்முகம் ஆகிய இந்த தம்பதியரின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஒக்டோபர் மாதம் 02ம் திகதி, 2015ம் ஆண்டு ஒரு இலடசம் டாலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணம் பெற்றிக் பாஸ்கரனின் வங்கிக் கணக்குக்கு சென்றது. இந்த கடனுக்கு வட்டியாக 12 வீதம் கட்ட வேண்டும் என்றும் மாதம் ஆயிரம் டாலர்கள் வீதம் கட்ட வேண்டும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அப்போதிருந்து சுமார் நான்கு மாதங்களுக்கு மட்டும் கட்டுப் பணத்தை அ வர்கள் திரும்பச் செலுத்தினார்கள்

ஆனால் தொடர்ந்து பல மாதங்கள் பணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் THE BOND GROUP நிதி நிறுவனத்தின் சட்டத்தரணிகள் கடன்பெற்ற பெற்றிக்-ஞானமலர் தம்பதிக்கும் அவர்களது சட்டத்தரணிக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதினார்கள். ஆனால் காலம் கடந்து சென்றது. தவணைக்கட்டணங்கள் கட்டப்படவில்லை. கடன் கொடுத்த THE BOND GROUPநிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் நீதி மன்றத்தை நாடியது.

இதை அறிந்த பெற்றிக் -ஞானமலர் தம்பதியின் சட்டத்தரணி THE BOND GROUP நிதி நிறுவனத்தின் சட்டத்தரணிக்கு கடிதம் ஒன்றின் மூலம் பணத்தை விரைவில் கட்டிவிடுவதாகவும், அதற்கு பொறுத்திருக்குமாறும் அறிவித்தார்கள். ஆனால் மாதங்கள் பல கடந்து கட்டணம் செலுத்தப்படவில்லை.

எனவே அ வர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு 07-03-2017 அன்று நீதி மன்றத்தில் வழங்கப்பட்டது THE BOND GROUP நிறுவனத்தின் சார்பில் Mr. Ivan Blazevic சமர்ப்பித்த வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டு அந்த ஆதனம் நிதி நிறுவனத்தின் கைக்குச் சென்றது.

பின்னர் பெற்றிக்-ஞானமலர் தம்பதியினர் Court of Appeal for Ontario நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அந்த வழக்குகளையும் நன்கு விசாரித்த நீதிபதிகள் 05-03-2018 அன்று வழங்கிய தீர்ப்பில் பெற்றிக் -ஞானமலர் தம்பதியினரின் விண்ணப்பத்தை நிராகரித்து தீர்ப்பு வழங்கினர். அந்த வழக்கு விசாரணைகளில் பெற்றிக் – ஞானமலர் தம்பதி பல தடவைகள் பொய்யான விபரங்களை நீதிமன்றத்தில் கூறியதையும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். (அதன் பிரதி இங்கே காணப்படுகின்றது).

இங்கு நாம் அனைத்து விடயங்களையும் விபரமாக தரமுடியாவிட்டாலும் எம்மிடம் பல பத்திரங்கள் THE BOND GROUP நிறுவனத்தால் காட்டப்பட்டன.

நீதிபதி தமது தீர்ப்பில் கடன் கொடுத்த நிதி நிறுவனத்திற்கு தவணைக் கட்டணம் மூலம் கடன் மீளச் செலுத்தப்படாவிட்டால் கடன் ஒப்பந்தத்தின் படி அந்த ஆதனம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை யாரும் பறித்துக் கொடுக்க முடியாது என்பதை THE BOND GROUP நிறுவனத்தினரும் திரு ரொம் திருக்குமாரும் எம்மிடம் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க அண்மையில் CTV என்னும் கனடிய தொலைக்காட்சியில் திரு பெற்றிக் அவர்களின் துணைவியார் திருமதி ஞானமலரை பேட்டி கண்டனர்.
ஆனால் அந்த பேட்யைப் பார்த்தவர்கள் ஒரு தமிழ் பேசும் தம்பதியை யாரோ ஏமாற்றிவிட்டார்கள் என்றுதான் எண்ணினார்கள். ஆனால் அந்தப் பேட்டியின் நோக்கம் TITLE INSURANCE என்னும் காப்புறுதி செய்தலை ஊக்குவிப்பது தான் என்பதை எம்மில் பலர் புரிந்து கொள்ளவில்லை.

அந்த பேட்டியை ஏற்பாடு செய்தவர்களே .TITLE INSURANCE வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் தான் இந்த பெற்றிக்-ஞானமலர் தம்பதியின் வீட்டிற்கு TITLE INSURANCE இருந்துள்ளது. ஆனால் அதை அவர்கள் கூறவில்லை. எனவே இந்த சம்பவத்தின் மூலம் TITLE INSURANCE துறையில் உள்ள அந்த நிறுவனம் ஒரு பிரச்சாரத்தை செய்ய முனைந்துள்ளது. இது தான் உண்மை. அதற்கு இந்த சம்பவத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

இவர்களது வீடு நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகச் சென்றது, தவணக் பணத்தை இரண்டு வருடங்களுக்கு மேலாக செலுத்தாமையே ஆகும். அதுவும் நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம். அவ்வாறு பெற்றிக்; -ஞானமலர் தம்பதிக்:கு மாதா மாதம் கடனை மீள செலுத்த இயலாமல் போனதற்கு வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம். அதற்கு தாங்கள் காரணகர்த்தாக்கள் அல்ல. இதையே HE BOND GROUP உறுதியாகக் கூறுகின்றது.