கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

உலக தமிழ் அழகி போட்டிகளும் முடிசூட்டும் பெருவிழாவும 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளன.

இந்த சிறப்பு நிகழ்வு தொடர்பான ஊடகச் சந்திப்பு மற்றும் விருந்துபசாரம் ஆகியன நேற்று இரவு நடைபெற்றிருந்தன.

கனடாவில் உள்ள வெற்றிகரமான தமிழர் நிறுவனங்களான Vibrant Hospitality Group and AGA Beauty. ஆகியவை இணைந்து வழங்கும் இந்த சர்வதேச அழகுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தமிழ் அழகி என்னும் பட்டத்தைப் பெற்று முடிசூட்டப்படும் ஆர்வத்தோடு பல நாடுகளிலிருந்;து அறிவும் ஆற்றலும் அழகும் அற்புதமும் கொண்ட இளம் தாரகைகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் பல வர்த்தகப் பிரமுகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்

Miss Tamil Universe” உலக தமிழ் அழகி போட்டிகளில் பங்குபற்றும் பல இளம் அழகிகள்உட்பட பலர் கலந்து கொண்டனர் Miss Tamil Universe” நிகழ்வின் நிறுவனர் திருமதி சசி கலா நரேன் மற்றும் அவரது கணவர் நரேன் ஆகியோர் உட்பட பல வர்த்தகப் பெருமக்கள் மற்றும் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்..
உலகத் தமிழர்கள், நாம் வாழும் கனடா தேசத்தை திரும்பிப் பார்க்கவுள்ளார்கள்……… கனடாவின் வளத்திற்காகவும் அழகிற்காகவும் அல்ல…
இங்கு இடம்பெறவுள்ள ” உலகத் தமிழ் அழகி” நிகழ்விற்காகவும் யார் அந்தப் பெருமையை முதற் தடவையாகப் பெறுகின்றார்கள் என்பதற்காகவும்…

இதில் ஆச்சரியம் எதுவென்றால் உலகளவில் முதற்தடவையாக நடைபெறும் விழாவில் போட்டிகளில் கலந்து கொளள விண்ணப்பித்த பல இள நங்கையர்கள் கனடாவிற்கான விசாக்களைப் பெற்று இங்கு வந்துள்ளனர்

நாம் அனைவரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நல்லதோர் உலக விழாவில் கலந்து கொண்டு எங்கள் ஆதரவை வழங்குவதற்காய் தயாராவோம்.