கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் இன்று புதிதாக 473 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் மொத்த பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணங்களில் பதிவாகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கனடியர்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புதிதாக 473 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 97,328 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவில் நோய் பாதிப்புக்கு புதிதாக 64 பேர் பலியாகினர். இதனால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 7,972 ஆக உயர்ந்தது. மேலும் சிகிச்சை பெற்று இதுவரை 57,144 பேர் குணமடைந்துள்ளனர். கனடாவில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒன்ராறியோவில் மட்டும் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். அந்த மாகாணத்தில் மொத்தமாக 31,544 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. கியூபெக்கில் இதுவரை 53,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,105 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் சிகிச்சையில் 20,299 பேர் மட்டும் குணமடைந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து கனடாவின் அல்பெர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நோவா ஸ்காட்டியாவில் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.