“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய “கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் வண. சந்திரகாந்தன், டாக்டர் போல் ஜோசப், திரு குமரகுரு, சிரிபிசி திரு இளையபாரதி,திருமதி நகுலராஜா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினார்கள்.
மண்டபம் நிறைந்த அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் அங்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்து வரிசையாக நின்று நூலின் பிரதிகளையும் பெற்றுச் சென்றனர்.
கனடாவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் வருகை யின் ஆரம்பம் தொடக்கம் தொடர்ச்சியாக குடியேறிய ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் சந்தித்த அவலங்கள் மற்றும் சவால்கள் தொடர்ந்து எமது மக்களின் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி எழுச்சி ஆகியவை தொடர்பாக இந்த நூல் சுவையாகச் சொல்லுகின்றது என அங்கு உரையாற்றிய அனைவரும் குறிபபிட்டார்கள்