- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

கனடாவில் அக்.,31 வரை பயணத் தடை நீட்டிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்., 31ம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் இதுவரை 1,58,758 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,34,971 பேர் குணமடைந்துள்ளனர். 9,297 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதித்து வருகிறது.

இந்நிலையில், கனடா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ‘கனடாவில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அக்., 31ம் தேதி வரை வெளிநாட்டினருக்குப் பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு கொடுக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.