Go to ...
Canada Uthayan Tamil Weekly
* தேர்தல் வெற்றிக்காக காங்., எந்த எல்லைக்கும் செல்லும்: தேவகவுடா    * சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்    * 'தவறு நடந்தது உண்மை தான்': மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்    * இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்    * கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லமிட்டெட் என்ற சென்னை நகைக் கடை அதிபர் சுமார் 824 கோடி ரூபாய் கடன்: சி.பி.ஐ. சோதனை
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, March 23, 2018

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து


தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது.
செல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார்.

பல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர்.

இங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்

.எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைவராகவும் நடுவராகவும் கலந்து சபையோரை மகிழ்விக்க உள்ள “வாங்க பேசலாம் புகழ் திரு ராஜா அவர்கள் இன்று கனடா ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அவரை விமான நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் ஸ்தாபகரும் பிரதம ஆசிரியருமாக திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம் மறறும் ஈசி24 நியுஸ் கிருபா கிசான் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்
திரு ராஜா அவர்கள் நடுவராகவும் நகைச் சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் அமையப்போகின்றன உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் இடம்பெறப்போகின்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் இன்று திரு ராஜா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பேச்சாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஸ்காபுறோ நகரில் செப்டம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “நல்ல வாழ்க்கைத் துணைக்கு அவசியமானது அன்பா? அல்லது அறிவா?” என்பதாகும். ஸ்காபுறோவில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி கோதை அமுதன், திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், கவிஞர் புகாரி மறறும் டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.. அத்துடன் ஸ்காபுறோ விழாவில் “பைரவி” இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக பாடகிகள் பாடுகின்றார்கள். நடனங்களும் உரைகளும் இடம்பெறுகின்றன.
மொன்றியால் நகரில் செப்டம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “மகிழ்ச்சியான வாழ்க்கையை எமக்குத் தருவது அவசியமானது பணமா அல்லது புகழா?” என்பதாகும். மொன்றியால் நகரில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி டாக்டர் பேபி குமாரி, , திருவாளர்கள் :தமிழ் மணி உயிரவன், ஆத்மஜோதி உதயகுமார், ஜெகசோதிலிங்கம் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.
அத்துடன் மொன்றியால் விழாவில் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக பாடகிகள் பாடுகின்றார்கள். நடனங்களும் உரைகளும் இடம்பெறுகின்றன.
ஸ்காபுறோவில் நகரில் அனுமதிச் சீட்டுக்கள் உதயன் பத்திரிகை அலுவலகத்திலும், சங்கர் அன்கோ, சாமி அன் சன்ஸ் மற்றும் பிரியாஸ் சுப்பர் மார்க்ட் (மார்ககம்) ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். Tickets only $ 20.00
மொன்றியால் நகரில் அனுமதிச் சீட்டுக்களை துர்க்கா பேனிச்சர், Fruits Happy (514 342 4229) Thanjai Restaurant (514 419 9696 ) AMR Inc Fruiterie ( 514 334 6737) ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். Tickets only $ 10.00
மேலதிக விபரங்களுக்கு 416 732 1608, 416 752 1524 அல்லது மொன்றியால் 514 924 3436 , 514 465 1053

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2