கனடாவின் “நட்சத்திரா” இசைக்குழுவினர் நடத்தும் பாராட்டு விழா

கனடாவில் கடந்த நான்கு வருடங்களாக இயங்கிவரும் “நட்சத்திரா” இசைக்குழுவினர் கனடியப் பாடகர் திரு ஜெயராஜ் கணபதிப்பிள்ளையின 25 வருட இசைத்துறை பங்களிப்பை மெச்சியும் கௌரவித்தும் நடத்தும் பாராட்டு விழா எதிர்வரும் யுலை மாதம் 15ம் திகதி மாலை 5.30 மணிக்கு ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பல்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பெரியோர்கள் மற்றும் கல்விமான்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த பாடகர்கள் இசையாசிரியர்கள் இசைக்கருவிகளில் ஆற்றல் மிகுந்த விற்பன்னர்கள் நண்பர் மற்றும் ஊடகவியல◌ாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து பாடகர் திரு ஜெயராஜ் கணபதிப்பிள்ளை அவர்களின் சேவையினைப் பாராட்டும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்