கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,148 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 68,839 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். நோய் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) புதிதாக 1,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 178 பேர் பலியாகினர்.

இதனால் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 68,839 ஆக அதிகரித்துள்ளது. கனடாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் கியூபெக்கில் இருந்து பதிவாகியுள்ளது. 142 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தேசிய பலி எண்ணிக்கையில் 60 சதவிகிதம் இந்த மாகாணம் தொடர்கிறது, ஒட்டுமொத்தபாதிப்புகளின் எண்ணிக்கையில் 55 சதவிகிதத்திற்கு அருகில் உள்ளது. கியூபெக் கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும், மேலும் அனைத்து மாகாணங்களிலும் (2,928 பலியானவர்கள்) அதிக பலி எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தற்போது 32000 மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 31000 பேர் குணமடைந்துள்ளனர். கனடாவின் பல்வேறு மாகாணங்களில் அதிகாரிகளின் புள்ளிவிபரங்கள் மூலம் இந்த பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்கின்றன. கியூபெக் மாகாணத்தில் நேற்று (கடந்த 24 மணிநேரம்) புதிதாக 735 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த மாகாணத்தில் பாதிப்பு 37000 க்கும் அதிகமாக உள்ளது. 9200 க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர். கனடாவில் இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோவை (ontario) போல் மாண்ட்ரீல் மாகாணத்திலும் 20,000 பேர் பாதிக்கப்பட்டனர். 1,850 பேர் பலியாகினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.