கட்சி காரர்களாலும்… வதந்தி பரப்பி பணம் செய்யும் இந்திய டிவி கம்பனிகளுக்கு ஆப்பு ?

பழைய சட்டங்களையே தொடர் வேண்டும் கடந்த இருபது வருஷங்களாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை சட்டத்தின் பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தேமே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.நன்றாயிருக்கிறது உங்கள் வேண்டுகோள் ….

பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின், ‘டிஜிட்டல் செய்தி’ தளங்களுக்கு என, ஏற்கனவே பல சட்டங்கள், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள், வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில், 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், டிஜிட்டல் செய்தி தளங்கள் வைத்துள்ள பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிரானது.

அத்துடன், புதிய சட்டத்தை பின்பற்றுவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு அதிக முதலீடு தேவைப்படும். இதை சிறிய நிறுவனங்களால் சமாளிக்க முடியாது. எனவே, புதிய சட்டத்தில், பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் டிஜிட்டல் செய்தி தளங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.