- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது.
தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.
மேலும், நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. தேசிய பட்டியலின் ஊடாக ஒருவர் மட்டுமே தேர்வாகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் உள்கட்சி அதிருப்தியாளர்கள் ஆக இருந்தவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் வேறொரு கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.