- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகை திருட்டு
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தருண் குமார், அதே பகுதியில் எஸ்எம் ஜூவல்லரி என்ற நகை கடையை வைத்துள்ளார்.
நேற்று அவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள், நகை வாங்குவது போல நடித்து 150 கிராம் நகைகளை திருடி சென்றுள்ளார். அதில், ஒரு பெண் தருண்குமாரிடம் நகையை காட்ட சொல்கிறார்.
நகையை எடுக்க தருண்குமார் திரும்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு பெண் சிறு பெட்டியில் இருந்த நகைகளை எடுத்து தனது பைக்குள் வைத்து கொண்ட பின் இருவரும் கடையிலிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் தருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.