கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

தமிழ் பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘2.0’. ஷங்கர் இதை இயக்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படும் 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது என்றார்.

மேலும், ரஜினிகாந்த் கூறியதாவது:- பணம் புகழைவிட விட மன அமைதிதான் முக்கியம். தவறான திரைப்படங்களை சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும். கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தை