கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வழமையான பூசைகள் அபிசேகங்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற பின்னர் இன்னும் கலைசார்ந்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வழமையான பூசைகள் அபிசேகங்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற பின்னர் இன்னும் கலைசார்ந்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது. யாரோ ஒரு கல்விமான் அல்லது புகழ்பெற்;ற அறிஞர் ஒருவருக்கல்;ல அந்த கௌரவம்.

நர்த்தனச் சிறுமி இளம் நர்த்தகி. கனடாவைச் சேர்ந்த ஜெயகாந்தன் தம்பதி பெற்றெடுத்த பதுமை, நடன ஆசிரியை திருமதி தேனுஜா திருமாறன் செதுக்கிய நடனப் பாவை. இந்த அற்புதச் செல்வி அஞ்சலி ஜெயகாந்தன் அண்மையில் இங்கிலாந்து பெருநாட்டில் நடைபெற்ற சர்வதேச நாட்டியப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை கௌரவிக்கும் முகமாக மேறபடி நடனப போட்டியை நடத்தும் வகையில் கனடாவில் முக்கிய காரணகர்த்தாக்கலாக விளங்கிய “அனலை எக்ஸ்பிரஸ்” அதிபர் திரு விமல் – விமலதாஸ் தவராஜா மற்றும் அவரது சகா செல்வன் தம்மையா ஆகியோர் ஏற்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி அதனை தனது ஆலய மண்டபத்திலேயே நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்த ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவும் ஸ்தாபகருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக குருக்கள் அவர்களின் முன்னிலையில் பல அடியார்கள் கூடி நிற்க மேற்படி விழா இனிதே நடைபெற்றது.

கனடா உதயன் பிரதம ஆசிரியர் விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றி பினனர் தான் ஒன்றாரியோ மாகாண முதலமைசசர் அவர்களின அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட சானறிதழை வாசித்து வழங்கினார். அவர் தனது உரையில்” யுத்தம் காரணமாக எமது நாட்டிலிருந்து பறந்த பல நாடுகளிலும் சிதறிவண்ணம் வாழ்ந்து வருகின்ற எமது ஈழத்து மக்கள் ஆஙகாங்கே வாழ்ந்தாலும் அவர்களை ஒன்றாக இணைக்;கும் கலை வடிவங்களில் பரதநாட்டியம் தான் முககிய ஊடகமாக விளங்குகின்றது. அவ்வாறான ஒரு மரியாதைக்குரிய கலையாக விளங்கும் பரதத்தை நன்;கு தேர்ச்சி பெற்ற ஆசிரியையிடம் கற்று அதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட நர்த்தகி அஞ்சலி அவர்கள் போற்றுதற்குரியவர் “என்றார்

சிவஶ்ரீ விஜயகுமாரக்; குருக்கள் திரு கனா ஆறுமுகம் திருமதி ரஜனி மதிவர்மன் உட்பட பலர் அங்கு உரையாற்றினார்கள்.
மேறபடி நடனப போட்டியை நடத்தும் வகையில் கனடாவில் முக்கிய காரணகர்த்தாக்கலாக விளங்கிய “அனலை எக்ஸ்பிரஸ்” அதிபர் திரு விமல் – விமலதாஸ் தவராஜா மற்றும் அவரது சகா செல்வன் தம்மையா ஆகியோர் செல்வி அஞ்சலிக்கு ஒரு தங்க அணிகலனை பரிசாக வழங்கினார்கள்.

அன்றைய தினம் வழிபாட்டுக்காக வந்திருந்த பக்தர்கள் கூட பூசைகள் முடிந்;த பின்னர் எமது இளம் நர்த்தகி செல்வி அஞ்சலிக்கு அளிக்கப்பட்ட கௌரவத்தை வாழ்த்தியவண்ணம் இல்லம் ஏகினர்

கனடா உதயன் செய்திப பிரிவு