- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு ஏரி, படகு குழாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன. நாளை அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தால் பேச்சுவார்த்தை நிச்சயம் நடக்கும்.
கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தையின் போது ஓபிஎஸ் அணியினர் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஆனால், இணைப்பு குறித்து ஓபிஎஸ் அணியினர் வெளியே பேச வேண்டாம்.
டிடிவி தினகரனை நீக்கும் முடிவில் யாருடைய நிர்பந்தமும் இல்லை. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருமனதுடன் முடிவு செய்தோம்” என்றார் ஜெயக்குமார்.