ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஜெயகுமாரின் 3 இலாகா ஒப்படைப்பு

அ.தி.மு.க. இரு அணிகள் இணைந்ததையட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார்.

இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதா கிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதி ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடியிருப்பு கட்டுப்பாடு, நகர்ப்புற ஊரமைப்பு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய இலாகாக்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப் பட்டிருந்தது.

இப்போது டி.ஜெயக்குமார் வசம் இருந்த இலாகாக்களில் திட்டமிடுதல், சட்டமன்றம், தேர்தல் பாஸ்போர்ட் ஆகிய இலாகாக்களும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஜெயக்குமார் மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை ஆகிய இலாகாக்களை கவனிப்பார்.