ஓட்டாவா மாநாட்டின் தாக்கங்கள் இலங்கை வரை பாய்ந்து சென்றுள்ளன

தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இன அழிப்பும் – நீதிக் கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும் என்னும் கருப் பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் கடந்த சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற பின்னர் மூன்றாவது நாளாக கனடிய பாhளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளமை ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியுள்ளது என பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் இலங்கை வசை பாய்ந்து சென்றுள்ளன என்று பதிவு செய்துள்ளமை கனடா வாழ் தமிழ் மக்களுக்கு செவிகளில் நற்செய்திகள் வந்து குவிந்த உணர்வை தோற்றுவித்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

மேற்படி மாநாட்டை ஒட்டாவா பெருநகரில் பல்கலைக் கழக வளாகங்களிலும் பாராளுமன்றத்திற்குள்ளும் நடத்துவதற்கு முன்னின்று உழைத்த அனைத்து அமைப்புக்களுக்கும் எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த மாநாட்டை நடத்தியதன் மூலம் கனடாவிலும் உலகளவிலும் பல வழிகளில் சிந்தனைத் தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அறிகி;ன்றபோது அதையிட்டு நாம் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது. எனவே நாம் இன்னும் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோளை இவ்வார கதிரோட்டத்தின் மூலம் விடுக்கின்றோம். இந்த வேண்டுகோள் பொது மக்களுக்கும் தான் என்பதையும் அவர்கள் எத்தனை நாட்களுக்கு வெறுமனே பார்வையாளர்களாக மட்டும் இருக்கப் போகின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்பும் ஒரு எழுத்தாகவே எமது கதிரோட்டம் அமைகின்றது.

மேற்படி ஒட்டாவா மாநாட்டில் உரையாற்றிய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் தங்கள் பணிகளைச் சிறப்பாகவே செய்தார்கள் என்பது முக்கியமான ஒரு தகவலாகத் தோன்றுகின்றது. சிறப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர தாமு மணிவண்ணம் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பிரிவைச் சேர்ந்த அமைச்சர் திரு நிமால் விநாயகமூர்த்தி ஆகியோரின் உரைகள் பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்ததனால், பார்வைபாளர்களினால் நன்கு கவனிக்கப்பட்டன என்பதையும் நாம் நன்கு கவனிக்க வேண்டும். அங்கு உரையாற்றிய காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் அவர்களின் உரை இலங்கை அரசின் தற்போதைய போலியான அரசியல் முகத்தை நன்கு கோடிற்றுக் காட்டியது என்பதையும் உலகின் செவிகள் கேட்டிருந்தன. காரணம் அவரது உரை சர்வதேசத்தையும் ஒட்டாவை நோக்கி தலையைத் திருப்பச் செய்தன.

வடக்கு கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச்சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. எ;றது. இதில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசின் மட்டுப்படுத்தப்பட்ட மீள்குடியமர்வு நடவடிக்கை மோசமான தரத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த உரை இலங்கையை திகைப்புக்குள்ளாக்கியிருந்தன என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்பதையும் நாம் பகிர்ந்துகொள்கின்றோம்.