ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி யூரியா தயாரிக்க திட்டம்

”நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிலும், ‘சிறுநீர் வங்கி’யை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சிறுநீரிலிருந்து யூரியா தயாரிப்பதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவின் அளவை கணிசமாக குறைக்க முடியும்,” என, மத்திய அமைச்சர், நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சிறுநீர் வங்கி,Urine bank, யூரியா, Urea, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,Union Minister Nitin Gadkari, விவசாயிகள், Farmers, ஸ்வீடன், Sweden, நைட்ரஜன் ,Nitrogen, பாஸ்பரஸ் ,Phosphorus, பொட்டாசியம்,Potassium,தாலுகா, Taluka,

மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா

மாநிலம், நாக்பூரில், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நம் நாட்டு விவசாயிகள், யூரியா உரத்துக்கு, வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெளிநாடுகளில்இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவை, நம் விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, யூரியா இறக்கு மதியை குறைக்க, புது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு தாலுகா விலும், சிறுநீர் வங்கியை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மனித சிறுநீரில், அதிமான நைட்ரஜன் அடங்கியுள்ளது. ஏற்கனவே, நம்மிடம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற, வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றுடன், நைட்ரஜனை சேர்க்கும் போது, யூரியா தயாரிக்க முடியும்.

இந்த பணிகள், துவக்க கட்டத்தில் உள்ளன. இதற்கான ஆய்வகம், நாக்பூர் அருகே அமைக்கப் பட்டுள்ளது. சிறுநீரை சேமிப்பதற்காக, ஒவ்வொரு

தாலுகாவிலும், ‘சிறுநீர் வங்கிகள்’ அமைக்கப் படும்.விவசாயிகள், 10 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களில், சிறுநீரை எடுத்து வந்து, இந்த வங்கிகளில் கொடுக்க லாம். இதற்காக அவர்களுக்கு, ஒரு லிட்டருக்கு, ஒரு ரூபாய் கொடுக்கப்படும்.

முதல்கட்டமாக, கிராமப்புறங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்; இது, பொருளாதார ரீதியாக சாத்தியமான திட்டமா என தெரியாது. இது ஒரு சோதனை முயற்சி தான். இதற்கான பணிகள், ஆரம்ப நிலையில் உள்ளன. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நிபுணர்களிடம், இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

என்னை பொறுத்தவரை, வீணாகும் பொருட் களை வைத்து, பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன். எனவே, வீணாகும் சிறுநீரை வைத்து, யூரியா தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.