- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்
கடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில்…
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெறும் சாலை மறியலில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் பெண்களே அதிகம் உள்ளனர். குழந்தைகளும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தொடர்ந்து நடைபெறும் இந்த சாலை மறியலில் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.