ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு பிப்.,5 ம் தேதி முதல் வெளியுறவுத்துறையின் பொருளாதார பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.