ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்கிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது : என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றுத.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழினத்தின் மீதான் போர்குற்றங்களுக்கும், இனப்ப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றதோ அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயங்களே பொருத்தம் என்றும், அதுதான் தமது நிலைப்பாடும் எதிர்பார்பும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மாணிக்கவாசகர், அதனை நோக்கிய தமது செயற்பாடு இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களின் நீதிக்கான செயற் வழிப்பாதையும் ஜெனீவா மட்டுமல்ல, அதற்கும் அப்பாலும் நமக்கான வாய்ப்புக்கள் அனைத்துலக அரங்கில் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டிய அமைச்சர் மாணிக்கவாசகர், நடந்துள்ள ஐ.நாவின் 40வது கூட்டத் தொடர் தமிழர் தரப்புக்களை ஒற்றைப்புள்ளியில் இணைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அனைத்துலக குற்றவியில் நீதிமன்றம் நோக்கிய செயல் முனைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்று பட்டிருப்பது ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான செயல் முனைப்பில் வலுவான ஒன்றாக எதிர்காலத்தில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.