ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்தார்.

ஐதராபாத் அணியில் முகமது நபி , சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதனையடுத்து ஐதராபாத் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.