- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

ஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி, ஆடை தொடர்பான சர்ச்சை ஒன்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை அன்றைய தினம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
நாடாளுமன்ற விதிகளை மீறி, அதாவுல்லா ஆடை அணிந்திருந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபையில் தெரிவித்திருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்த ஆடைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
நாடாளுமன்ற விதிகளை மீறி ஆடை அணிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தான் மேலாடையின்றி வருகைத் தருவதாக சபாநாயகரிடம் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருந்தார்.
ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதை போன்றதொரு ஆடையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாகவும் எஸ்.எம்.மரிக்கார் அன்று குற்றம் சுமத்தியிருந்தார்.
பக்கச்சார்பின்றி, நேர்மையாக நாடாளுமன்றத்தில் கடமையாற்றுமாறு சபாநாயகரை பார்த்து, எஸ்.எம்.மரிக்கார் கோரியிருந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு ஏ.எல்.எம்.அதாவுல்லா சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வெள்ளை நிற ஆடையொன்றின் மீது கறுப்பு நிறத்திலான மேலாடையொன்றை அணிந்து நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்திருந்தார்.
நாடாளுமன்ற சபைக்குள் அதிக குளிர் காரணமாகவே தான் இவ்வாறான ஆடையொன்றை அணிந்திருந்ததாக அவர் அன்றைய தினம் சபையில் அறிவித்திருந்தார்.
பின்னர் அன்றைய தினத்திற்கு மாத்திரம் அவருக்கு சபைக்குள் பிரவேசிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.