- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
- தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?
அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அது அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது.
இது குறித்து ஏர்இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மும்பையில் இருந்து நெவார்க் நோக்கி புறப்பட்ட ஏஐ 191 விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது.
லண்டன் விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், விமான ஓடு பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஏர்இந்தியா போயிங் 777 விமானம் 10.15 மணிக்கு திருப்பி விடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏர்இந்தியா, வெடிகுண்டு மிரட்டல் என பதிவிட்ட டுவீட்டை, சில நிமிடங்களிலேயே நீக்கி உள்ளது, வெடிகுண்டு மிரட்டல் வந்தது உண்மையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக விடுக்கப்பட்ட டுவிட்டர் பதிவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.