எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து – எம்.ஜி.எம் மருத்துவமனை

கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 75, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.’எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி., உடல் நிலையில் ஏற்பட்டு வந்த முன்னேற்றத்தால், திரவ உணவு வழங்கப்பட்டு வருவதாக, அவரது மகன் சரண், சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.எம்.ஜி.எம்., மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த, 24 மணி நேரத்தில், எஸ்.பி.பி., உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன், தொடர்ந்து சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தீவிரமாக கவனித்து வருகின்றனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.