Go to ...
Canada Uthayan Tamil Weekly
* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி    * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண்    * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா    * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, May 25, 2018

எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்


சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்  நவம் அவர்கள் 2017-04-12 அன்று   மட்டக்களப்பில் காலமானார். எமது கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக பல கட்டரைகளை எழுதி வந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் லீலாவதி அவர்களின் அன்புக்கணவரும், இந்துமதி (அமெரிக்கா), முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா), நளாயினி,( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்ஃ. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று  மட்டக்களப்பில் இடம்பெறும். தொடர்புகளுக்கு:- 01194766983738

One Response “எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்”

 1. Nakkeeran
  April 16, 2017 at 5:03 pm

  பிரபல எழுத்தாளர் நவம் (இயற்பெயர் சீனித்தம்பி ஆறுமுகம்) அவரது சொந்த ஊரான மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்த ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார். தனது கடைசிக் காலத்தை தனது பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தவர். அவரது மகன் முகுந்தன் அமெரிக்கா செல்ல வதிவிட இசைவுச் சீட்டு எடுத்துக் கொடுத்தும் அவர் அங்கு நிரந்தரமாக இருக்க மறுத்துவிட்டார்.

  நீண்ட காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்த அவர் அவரது பிள்ளைகளைப் பார்க்க அமெரிக்கா, கனடா வந்து சிலகாலம் இருந்து விட்டு ஓராண்டுக்கு முன்னர் ஊர் திரும்பினார். கனடாவில் அவரது பேத்தியின் நடன அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். அதுவே அவரோடும் அவரது குடும்பத்தோடும் ஆன எனது கடைசிச் சந்திப்பு. சென்ற கிழமை அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரைவிட லீலாதான் 30 நிமிடம் அளவில் பேசினார். வழக்கம் போல பழைய நினைவுகளை இரை மீட்டுக் கொண்டோம். எப்போதும் போல நகைச் சுவை கலந்த கல கல பேச்சு. தொண்ணூறு அகவையை நெருங்குவதாக அவரது மனைவி லீலா சொனனார். இப்போதும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

  நவம் – லீலா திருமணம் காதல் திருமணம். இருவரும் ஆசிரியர்கள். அன்றில் பறவைகள் என்று சொல்வோமே? அது போல இணைபிரியாத சோடிகள். வாழ்க்கையில் நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார் கண்ணதாசன். அப்படியே ஒரு மனைவி வந்து வாய்த்தாலும் வாழ்க்கை துணையாக அமைவது அருமை.

  கனடாவுக்கு வந்தால் கட்டாயம் எங்களது வீட்டுக்கு வருவார். ஐம்பதுகளில் நான் இரத்தினபுரியில் பணிபுரிந்த காலத்தில் ஆசிரியர் நியமனம் பெற்று அங்கு வந்தார். பின்னர் நான் மட்டக்களப்பில் பணயாற்றிய காலத்தில் வார இறுதி நாள்களில் ஆரையம்பதியில் இருந்த அவரது வீட்டுக்குப் போய்விடுவேன். வாவிக்கரையில் அவரது வீடு.

  ஐம்பதுகளில் கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் நந்தினி என்ற கதை எழுதி முதல் பரிசு பெற்றவர். மறைந்த ஜெமினி கணேசன், மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா கவிப்பேரரசு வைரமுத்து போன்றோரது உற்ற நண்பன். ஜெமினி கணேசனோடு நெருங்கிய தொடர்பு. அவரது பிற்ந்த நாளில் மறக்காமல் அவரது இல்லம் சென்று வாழ்த்துவார்.
  வந்தது தெரியும் போவது எங்கே?
  வாசல் நமக்கே தெரியாது
  வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
  மண்ணில் நமக்கே இடமேது?
  வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
  ஜனனம் என்பது வரவாகும் – அதில்
  மரணம் என்பது செலவாகும்.
  உறவைச் சொல்லி அழுவதனாலே
  உயிரை மீண்டும் தருவானா?

  அவரது மனைவி லீலா, முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜெர்மனி), கீதாஞ்சலி,(கனடா), நளாயினி ( கனடா) தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோருக்கும் உற்றார் உறவினருக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2