எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

வீரமரணம் அடைந்த வீரர், உத்தர்கண்ட் மாநிலம் ரிஷிகேஷின் கங்கா நகரை சேர்ந்த பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் உள்ள கமல்கோடே செக்டாரில், 2 பொது மக்களும், ஹாஜி பீர் செக்டாரில் ஒருவரும், பாகிஸ்தானின் அத்துமீறலில் உயிரிழந்தனர்.

மேலும் 6 பேர் காயமடைந்தனர். பந்திபூரா மாவட்டத்தின் குரேஷ் செக்டாரிலும், குப்வாரா மாவட்டத்தின் கெரான் செக்டாரிலும், பாகிஸ்தானின் அத்துமீறலில் ஈடுபட்டது.எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் 3 சிறப்பு கமாண்டோக்கள் உள்ளிட்ட 8 பாக்., ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

latest tamil news

கெரான் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரான் செக்டாரில், சந்தேகப்படும்படியான நடமாட்டத்தை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்தனர். அவர்கள் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில், அவர்கள் அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் திரும்பி சென்றுவிட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.