எம்.பி.,க்கள் சம்பளம் ‘கட்’: பா.ஜ., யோசனைக்கு டிஆர்எஸ் பாராட்டு

எம்.பி.,க்களின் கடும் அமளி காரணமாக தொடர்ந்து 13 வது நாளாக பார்லி.,யின் இரு அவைகளும் இன்றும் முடங்கி உள்ளன.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து, தங்களின் பொறுப்புக்களை உணராமல், அவையை ஆக்கபூர்வமாக செயல்பட விடாமல் செய்யும் எம்.பி.,க்களுக்கு சம்பளம் தரக் கூடாது. வேலை செய்யாத எம்.பி.,க்களுக்கும் தண்டனையாக சம்பளம் தரக் கூடாது என பரிந்துரைத்து பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி., கவிதா, அன்றாட பிரச்னைகள் குறித்து அரசு தினமும் விவாதித்தால் பார்லி.,யில் எந்த கட்சியோ எம்.பி.,யோ போராட அவசியம் இருக்காது. இருப்பினும் அரசு வேலை செய்யாத எம்.பி.,க்களுக்கு சம்பள பிடித்தம் செய்தால் பாராட்டதக்கது என டுவிட் செய்துள்ளார்.

பா.ஜ.,விற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரித்து வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி., பா.ஜ., வின் யோசனைக்கு பாராட்டு தெரிவித்திருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.