எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 10-ம் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

நடராஜனுக்கு தற்போது டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று, நடராஜனுக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடராஜனின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டு பெங்களூர் சிறை அதிகாரியிடம் சசிகலா, மனு செய்துஇருப்பதாக கூறப்படுகிறது.