எமது தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளால் தான் நாம் அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எமது தமிழ் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனை களும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளினால் தான் நாம் தொடர்ச்சி யாக அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Chithambara Maths Challenge என்னும் அமைப்பின் ஏற் பாட்டில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணிதப் போட்டிப் பரீட்சைக்கான பரி சளிப்பு விழா நேற்று வல்வெட்டித்துறை தீரு வில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதா னத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி நிலையில் பின்தள்ளப்பட்டனர்.

அவர்களின் குடும்பங்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். வீடு, வாசல் சொத்துக்களை இழந்து தொழில் முயற்சி களின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்த சூழ் நிலையில் அவர்களுக்கான விரைந்த உதவி கள் நேரடியான உறவுகளின் மூலமாகவும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடாகவும் வழங்கப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து பலதரப்பட்ட மக்கள் இங்கு பல்வேறு வேலைத்திட்டங் களை முன்னெடுப்பதற்காக வருகை தருகி றார்கள். அத்துடன் தெற்கில் இருந்தும் திட்ட முன்மொழிவுகளைத் தருகின்றார்கள். ஆனால் அவர்களின் திட்டமுன்மொழிவு களை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும் பாலும் நிலச்சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களாகவோ அல்லது இப் பகுதிகளில் உள்ள கனியவளங்களையும் ஏனைய உற்பத்திகளையும் சுரண்டிச் செல் லுகின்ற திட்டங்களாகவோ அமைந்திருப்ப தைக் காணலாம்.
இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலை வர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொட ர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்தி ப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம். இந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம்கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

தினம் தினம் பத்திரிகைகள் தாங்கி வரு கின்ற செய்திகள் எம்மைத் திகைக்க வைக்கி ன்றன. ஒரு காலத்தில் முழு இல ங்கைக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக விளங்கிய வடபகுதி இன்று இந்த நிலைக்கு தள்ளப்ப ட்டிருப்பது வேதனைக்குரியது.

இவற்றையெல்லாம் சீர் செய்ய ஸ்திர மான ஒரு அரசியல் அமைப்பும் அதைத் தயா ரிக்க மக்கள் பங்களிப்பும் அவசியமானவை. அதற்கான வழிமுறைகளை நாம் அனை வரும் இணைந்துகொண்டு முன்னெடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.