எதற்கெடுத்தாலும் போராட்டம்: தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: கோபத்தில் ரஜினி விளாசல்

மக்கள், போராட்டம் போராட்டம் என போனால், தமிழகம் சுடுகாடாக மாறும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

தூத்துக்குடி சென்று விட்டு திரும்பிய பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி தான் அதை கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் போராட்டத்தை கெடுத்தனரோ அதே போல், தூத்துக்குடியில் கெடுத்தனர். போலீசார் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவர்களை வெளியே கொண்டு வந்து காட்ட வேண்டும். சமூக விரோதிகள் போலீசாரை அடித்தனர். இதன் பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது. மக்கள் , எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என போனால், தமிழ்நாடு சுடுகாடாகிடும். இவ்வாறு அவர் கூறினார்.