- கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து - 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார்.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடைக்கலம் வழங்கிய நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன.
ஈழ அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தமது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்னோவ்டன், தாம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களை விட, ஈழ அகதிகள் அதிக அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.